தமிழ்நாட்டில் 20 லட்சம் வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல், வாக்குச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திவீர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை, 6 கோடியே 19 லட்சம் வாக்காளர்களுக்குப் படிவம் விநயோகம் செய்யப்பட்டு 3 கோடியே 76 லட்சம் படிவங்கள் திரும்பப்பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இன்னும், 21 லட்சம் வாக்காளர்களுக்குக் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முகவரி மாறியதால், அவர்களை தொடர்பு கொள்வதில் வாக்குச்சாவடி அதிகாரிகள் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
















