அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
இந்த நிலையில், போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்ற கோஷத்திற்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியுள்ளது.
















