திருப்பூர் சின்ன காளிபாளையத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போலீசார் தடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாகப் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் போலீசார் தடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், மொபைல் டாய்லெட் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிகிறது. போராட்டம் இரவு நேரத்திலும் தொடர்வதால் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
அதனையும் போலீசார் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















