காலிஸ்தான் ஆதரவு வாக்கெடுப்பு நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காலிஸ்தான் தனிநாடு உருவாக்குவதை ஆதரிக்கிறீர்களா என்பது குறித்து, கனடா தலைநகர் ஒட்டாவாவில், அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பை சீக்கியர்கள் அமைப்பு நடத்தியது.
அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் தேசிய கொடியை அவமதித்த காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
















