சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பலருக்கும் எஸ்ஐஆர் படிவங்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து, மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்னை பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் பல வார்டுகளில் எஸ்ஐஆர் படிவங்கள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக வட்டாட்சியர், வாக்குச்சாவடி அலுவலருக்குத் தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லையென அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிவங்களை பெறுவதற்காக அடிக்கடி வாக்குச்சாவடிக்கு வரவழைக்கப்படுவதாக மூத்த குடிமக்கள் புகார் கூறியுள்ளனர்.
















