உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடிகர் ஜெயராம், அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரபல மலையாள நடிகரான ஜெயராம், தனது மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவர்களுக்கு, கோயில் தீட்சிதர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம், 30 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் கோயிலுக்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தனுஷுடன் தற்போது புதிய படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர், நடிகை ஊர்வசியுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம் செய்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோயில் யானைக்கு பிரசாதம் வழங்கிய அவர், கோயில் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறு வயதில் கும்பேஸ்வரர், சாரங்கபாணி கோயில்களுக்கு அடிக்கடி வந்ததாக தெரிவித்தார். கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.
















