பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தன்னுடை பதவி காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அதனை விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அடியாலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இம்ரான்கானை சந்திக்க கடந்த ஒரு மாதமாக உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறையில் இம்ரான்கான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக சமூகவலைத்தளத்தில் தகவல் பரப்பப்படுகிறது.
மேலும் இம்ரான்கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
















