தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டையுன் விவசாயி மனு கொடுக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலம் சில மாதங்களுக்கு முன்பு தனியார் சோலார் நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட விவசாயி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை எனக்கூறி தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை தலையில் சுமந்து வந்து சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
















