திண்டுக்கல் கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 22 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய ரயில் நிலைய கட்டடம், பயணி சீட்டுப் பதிவு மையங்கள், ரயில் நிலைய கட்டட முகப்பு மேம்பாடு, பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின்தூக்கி வசதியுடன் கூடிய 6 மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சீரமைப்பு பணிகளைத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் புதிய வசதிகள் அடுத்த ஆண்டு மே மாதம் பயணிகள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















