நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிக்க 3வது நாளாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
இருப்பினும் கரையாறு சொரிமுத்து ஐய்யனார் கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
















