நாமக்கல் மாவட்டம், குமராபாளையம் பகுதிக்கு முதலமைச்சரின் திடீர் வருகையால் சாலையோர கடைகளை மூடக் கூறியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
குமாரபாளையம் பகுதியில் திமுக முன்னாள் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுந்தரம் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென வருகை தந்தார்.
அப்போது, சேலம் பிரதான சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அவசரம், அவசரமாக மூடக் கூறி போலீசார் உத்தரவிட்டனர்.
இதனால், சாலையோர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த வழியாகப் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
முதலமைச்சரின் திட்டமிடாத வருகையால் குமாரபாளையம் – சேலம் சந்திப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
















