இங்கிலாந்தை சேர்ந்த சாகச பயணி ஒருவர் 27 ஆண்டுகளாக உலகை சுற்றும் பயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி, முன்னாள் பாராசூட் வீரர், நடைபயிற்சி சாகசக்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தற்போது உலகம் முழுவதும் முழுமையாக நடந்த முதல் நபராக இருக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மனித வரலாற்றிலேயே மிக நீண்ட நடைப்பயணமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் அடர்ந்த காடுகள், பாலைவவனங்கள், உறைப்பனி குளிர் ஆகியவற்றை கார்ல் புஷ்பி எதிர்கொண்டுள்ளார்.
1998இல் சிலியில் இருந்து புறப்பட்ட காரல் புஷ்பி, அமெரிக்கா, ஆசியா முழுவதும் நடந்து சென்றார். பயணத்தின் ஒரு கட்டத்தில் காஸ்பியன் கடலைக் கூட நீந்திக் கடந்துள்ளார். பல இடங்களில் கைது மற்றும் அதிகாரிகளின் தடைகள் ஆகியவற்றையும் கார்ல் புஷ்பி சமாளித்துள்ளார்.
சுமார் 47 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடந்தள்ள புஷ்பி, தற்போது இங்கிலாந்தின் ஹல்லில் உள்ள அவரது வீட்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ளார்.
27 ஆண்டுகளாக உலகை சுற்றி வரும் புஷ்பியின் இந்தப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
















