திருப்பத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனி – சரோஜா தம்பதி திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் உள்ள 11 ஏக்கர் 19 சென்ட் நிலத்தைச் சென்னையில் உள்ள விஆர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளனர்.
அடமான தொகையாக மூன்றரை கோடி ரூபாய் கொடுப்பதாகக் கூறிய நிறுவனத்தினர் அதுதொடர்பாகச் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். மேலும் அதற்கான பணத்தை சென்னை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து சென்னையில் அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றபோது அலுவலகம் பூட்டியிருந்ததைக் கண்டு பழனி – சரோஜா தம்பதி அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
















