ராமேஸ்வரம் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வளாகத்தில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினருக்கு நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் ராமஸ்வரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
















