நெல்லை தீயணைப்பு துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து அதிகாரியை, சக ஊழியரே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி எனச் சரவணபாபு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து சோதனைக்கு முந்தைய நாள், மர்ம நபர் ஒருவர் தனது அலுவலகத்தில் பணப் பையை வைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டார்.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணத்தை வைத்தது தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு நிலைய வீரர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
















