திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திருமணமான இரண்டாவது நாளே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முருகப்பா தெருவை சேர்ந்த பீயூலாவுக்கு, புரசைவாக்கத்தை சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வாவுடன் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான மறுநாள் இரவே, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அகஸ்டின் ஜோஷ்வா, பீயூலாவை சுத்தியலால் அடித்து வீட்டில் உள்ள அறைக்குள் பூட்டி வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பீயூலாவின் பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், தகவறிந்த போலீசார் அகஸ்டின் ஜோஷ்வாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பல பெண்களை மிரட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
















