ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திருவிதாங்கூர் தேவம் போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது.
நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்பினர்.
இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஸ்பாட் புக்கிங் தரிசனத்தை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக அம்மாநில காவல்துறை குறைத்தது.
இதனிடையே தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் இல்லாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல அனுமதி கிடையாது எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
எனவே நிலக்கல்லில் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்யலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்த பம்பை, எருமேலி மற்றும் செங்கனூர் ஆகிய இடங்களில் இருந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளன.
















