ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க மறுக்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன்
Oct 13, 2026, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவளிக்க மறுக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 07:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை முதல்வர் ஸ்டாலின் எப்போதுதான் கவனிப்பார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்கப்படுதில்லை எனவும், விடுதி மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசின் முகத்திரையை நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன.

தன் பிள்ளை ஒருவேளை (அசைவ) உணவையாவது வயிறார உண்ணட்டும் என்ற ஆசையில் தான் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் அரசுப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒருவேளை உணவைக் கூட கொடுக்க இயலாதவர்கள் அரசு மாணவர் விடுதிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

ஆனால் திமுக அரசின் ஆட்சியில் பள்ளி சத்துணவில் புழு, பூச்சி, பல்லி மிதக்கிறது. அரசு விடுதிகளில் உணவு மறுக்கப்படுகிறது. இப்படி எளிய பின்புலமுள்ள மாணவர்களின் உணவு விஷயத்தில் திமுக அரசு ஒரு மெத்தனப்போக்கைக் கடைபிடிப்பதன் பின்னணியில் ஆளும் வர்க்கத்தின் ஆணவம் ஒளிந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

மேலும், குடியைக் கெடுக்கும் சாராயக்கடை வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி இயங்கும் பொழுது, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை மட்டும் எதற்காக வார இறுதி நாட்களில் மூட வேண்டும்? திமுக ஆட்சியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளை, விடுதியில் இருந்து துரத்தினால் அவர்கள் எங்கு போவார்கள்? இதுதான் திமுகவின் எல்லோருக்குமான ஆட்சியா? வெற்று விளம்பரங்களிலும் பாராட்டு விழாக்களிலும் மதி மயங்கிக் கிடக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களை எப்போதுதான் கவனிப்பார்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்DMK government refuses to feed Adi Dravidian students - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

தூய்மை பணியாளர்கள் மீது திமுக அரசு அக்கறையற்று உள்ளது : உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி

Next Post

ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வந்தால் பம்பைக்கு செல்ல அனுமதி இல்லை : திருவிதாங்கூர் தேவம் போர்டு

Related News

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies