முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு
Sep 23, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Manikandan by Manikandan
Jun 23, 2026, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் மற்றும் கட்சி நிதி குறித்த முதலமைச்சர் விஜயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, பின்னர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், தவெக அரசு ஒருபோதும் ஊழல் செய்யாது என்றும், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் வசூல்கள் அனைத்தும் தற்போது அரசின் கஜானாவுக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு தவெக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் பேசுவதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், முதலமைச்சரின் உரை முடிந்தவுடன் எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்

இதனை அடுத்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது பின்பற்றிய நடைமுறையை தற்போது ஏன் பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், திமுக-வின் முந்தைய நிலைப்பாட்டிற்கும், தற்போதைய செயல்பாட்டிற்கும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் மரபு மற்றும் பாரம்பரியம் குறித்து திமுக-வினர் வகுப்பு எடுத்ததாக விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது சட்டத்திற்கு எதிராக பல வார்த்தைகள் பேசப்பட்டதாக கூறிய அவர், அப்போது முதலமைச்சர் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார். தற்போது முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் அவர்களே குறுக்கிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், கட்சி நிதி என்றுதான் முதலமைச்சர் கூறியதாகவும், எந்த கட்சியைப் பற்றியும் அவர் குறிப்பிடவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தாம் பேசியபோது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேச சபாநாயகர் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். மேலும், கட்சி நிதி குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், தைரியம் இருந்தால் எந்த கட்சி என்று தெளிவாக தெரிவிக்க வேண்டும் என உதயநிதி சவால் விடுத்தார்

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் போலவே பல துறைகளிலும் கட்சி நிதி என்ற பெயரில் நடைபெற்றதாகக் கூறப்படும் வசூல்களை அரசின் கஜானாவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். பேரவையில் சிலர் நடுங்கிப்போய் தவெகவினர் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறினார். மேலும், மக்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும், மக்கள் அனைத்தையும் தெளிவாக கவனித்து வருகின்றனர் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

இதனிடையே, முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags: DMKSpeechVijaywalkout
Share
Tweet
SendShare
Previous Post

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

Next Post

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies