கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும், இரவில் அழைக்கக் கூடாது எனவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
கடன் கொடுத்த நிறுவனங்கள் மற்றும் திருப்பி வசூலிக்கும் ஏஜென்ட்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அனுமதி வாங்க வேண்டும் அல்லது கடன் கொடுத்தவர்கள் வேண்டுகோள் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ அவசர நிலை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான நேரங்களில் கடன் வாங்கியவர்களை தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
வங்கிகளுக்கும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என்றும். இந்த நடைமுறைகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
















