அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 141 வயதான ஆமை உயிரிழந்ததால் பார்வையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் சான்டியாகோ உயிரியல் பூங்காவில் கலாபகோஸ் வகையை சேர்ந்த கிராமா என்ற ராட்சத ஆமை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது.
கலாபகோஸ் இனங்களில் 13க்கும் மேற்பட்ட வகைகளில் ஆமைகள் உள்ளன. இவை ஈக்வடாரில் உள்ள முக்கிய தீவான கலாபகோஸில் காணப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
இந்த வகையைச் சேர்ந்த கிராமா என்ற 141 வயதுடைய ராட்சத ஆமை சான்டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது.
உயிரியல் பூங்காவின் பழமையான மற்றும் மிகவும் விரும்பத் தக்க உயிரினமாக இருந்த கிராமா ஆமை, சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் வாழ்த்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இது, இயற்கை ஆர்வலர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















