கோவையில் துடியலூரில் வாகனங்களின் மீது ரயில்வே கேட் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. ரயில் அவ்வழியை கடந்து சென்றதால் தடுப்புகளை கேட் கீப்பர் திறந்து விட்டார்.
வாகனங்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ரயில்வே கேட் இரும்பு கம்பம், வாகனங்களின் மீது திடீரெனச் சரிந்தது.
இதில், வாகன ஓட்டிகள் நூலிழையில் உயிர் தப்பியபோதும் அவர்களது வாகனங்கள் சேதமடைந்தன. கேட்டை மேலே உயர்த்தும் கம்பி பழுதானதால் திடீரெனச் சரிந்ததாகக் கூறப்படுகிறது.
















