கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாகத் திற்பரப்பு அருவியில் 5வது நாளாகச் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு மழையின் தாக்கம் குறைந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால், அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 45 அடியை எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், திற்பரப்பு அருவியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் 5வது நாளாகச் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், அருவி பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















