பேருந்து வசதி இல்லையென கூறி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள், போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேல்மலையனூரில் இருந்து செஞ்சிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து, சீயப்பூண்டி கிராமம் வழியாக வருவதில்லை எனவும் இதனால் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதி அளித்தனர்.
















