வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாகத் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நாகை மாவட்டத்திற்கு அதி கனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது.
















