சென்னையை அடுத்த தாம்பரத்தை, மாநகராட்சியாகத் தரம் உயர்த்திய பிறகும், ஒரு பகுதி மட்டும் பெயர் பலகை மாற்றப்படாமல் பெருநகராட்சியாகவே உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாமபரத்தை சுற்றியுள்ள ஐந்து பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளை ஒன்றிணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் மாநாராட்சி உதயமானது.
மாநகராட்சியாக மாறியபிறகும், அப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் 33வது வார்டுக்குட்பட்ட மவுலானா நகரில் மட்டும் பெயர் பலகைகள் தாம்பரம் பெருநகராட்சி என்ற அளவிலேயே உள்ளது.
எனவே தரம் உயர்த்தப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்குரிய அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
















