வெனிசுலாவில் எரிபொருள் டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்துக் கடத்தப்பட்ட 500 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
போதைப்பொருள் கடத்தி வரப்படும் கப்பல்கள் மீதும் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவில் எரிபொருள் நிரப்பியபடி வந்த டேங்கர் லாரியைக் காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது டேங்கரின் மேல்புறத்தில் அமைக்கப்பட்ட ரகசிய அறையில், 500 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலாவில் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மிக விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில் கொகைன் கடத்தல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
















