கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் தவசி, கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப் பீளமேடு போலீசார் அனுமதி கேட்டுக் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசாருக்கு அனுமதி அளித்தது.
















