வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாகத் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் எதிரொலியாகத் தனுஷ்கோடி கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வத்துடன் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
















