விழுப்புரம் அருகே பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த திமுக நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை, திமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஸ்கர் தன்னை வீடியோ எடுத்து மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணே காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
















