தாய்லாந்தில் கப்பலில் இருந்து சுற்றுலா பயணிகளின் உடமைகள் கடலில் விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தாய்லாந்தின் ஆமைத் தீவு என்று அழைக்கப்படும் கோ தாவோ-வில் இருந்து இரண்டாவது பெரிய தீவான கோச்சாமுய் தீவுக்குச் சுற்றுலா பயணிகள் கப்பலில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் கப்பல் நிலை தடுமாறியது. இதில் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் சூட்கேஸ்கள் அனைத்தும் கடலில் விழுந்தன.
கடல் கொந்தளிப்புடன் இருந்ததால் அவற்றை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. சூட்கேஸ்களில் பாஸ்போர்ட், பயணக் காப்பீடு, பணம் உள்ளிட்டவை இருந்தன. இந்தச் சம்பவத்திற்கு கப்பல் நிர்வாகத்தின் அலட்சியேமே காரணம் எனச் சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுனர்.
இதையடுத்து அவர்களுக்குக் கப்பல் நிர்வாகத்தினர் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையை வழங்கினர்.
















