உத்தர பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்களை வாழ்த்த அரசியல் கட்சியினர் மேடைக்குச் சென்றபோது மேடை சரிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியா நகரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது புதுமணத் தம்பதியினரை வாழ்த்துவதற்காகப் பாஜக மாவட்ட தலைவர் சஞ்சய் மிஸ்ரா, முன்னாள் எம்பி பாரத் சிங், எம்எல்ஏ பிரதிநிதி விஸ்ராம் சிங்க உள்ளிட்ட பலர் மேடைக்குச் சென்றனர்.
அப்போது மேடை சரிந்து விழுந்ததில் மணமக்கள் உட்பட அனைவரும் கீழே விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
















