பெண்ணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கோவை சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலய பாதிரியார் மற்றும் அவரது நண்பர் மீது பிணையில் வெளிவர முடியாத ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிஎஸ்ஐ பேராலய தலைமை பொறுப்புக்குப் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பெயரை பரிந்துரை செய்ய எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பிரின்ட்ஸ் கால்வின் போலியாகத் திருமண பதிவுச் சான்று பெற்றதாகப் பேராலய பெண் உறுப்பினர் ஒருவர் அதற்குரிய ஆவணங்களைக் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரின்ஸ் கால்வின், தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவர் மூலம் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார.
இதைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் பிரின்ஸ் கால்வின் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் நேச மெர்லின் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















