கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் நரேந்தர மோடி வழிபாடு நடத்தினார்.
ஒருநாள் பயணமாகக் கர்நாடகாவின் உடுப்பிக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் உடுப்பி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மடத்தில் நடைபெற்ற லட்ச கந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியைச் சந்தித்து பிரதமர் ஆசி பெற்றார்.
















