2025ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலிய லோவி நிறுவனத்தின் ஆசிய வல்லமைக் குறியீடு 2025-இன் தரவரிசை தற்போது வெளியாகி உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் ராணுவத் திறன்களின் அடிப்படையில், இந்தியா முக்கிய வல்லரசு நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-இல் 38.1 புள்ளிகளுடன் நடுத்தர வல்லரசாக இருந்த இந்தியா, நடப்பாண்டு 40 புள்ளிகளைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஏற்றத்திற்குக் காரணம், கடந்த மே மாதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையே என்று லோவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதாரத் திறன் மற்றும் எதிர்கால வளங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்து, பொருளாதாரத் திறனில் ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
















