கலைத்துறையில் 50 ஆண்டுகளாக சேவையாற்றி கோலோச்சியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாநத்திற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், விருது பெற்றுள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மேலும் பல்லாண்டுகள் கலைத்துறைக்கு சேவையாற்றி, தமிழக திரைத்துறையை மேன்மேலும் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
இந்த இனிய தருணத்தில், சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்திய பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த எல்.முருகன், @IFFIGoa அமைப்புக்கும் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
















