சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை விமானத்தினுள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு விமானப் விமானத்தில் இருமுடியை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















