தெற்கு ரயில்வேயில் ‘ஏசி’ வசதி இல்லாத, ‘ஸ்லீப்பர்’ பெட்டி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஏசி’ வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முதல் முறையாக படுக்கை விரிப்பு வசதி வழங்கப்பட உள்ளதாகவும்,
இந்த நடைமுறை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நீலகிரி, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் இத்திட்டம் அறிமுகப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
50 ரூபாய் கொடுத்து தலையணை மற்றும் பெட்ஷீட் பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 28 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
















