இலங்கையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் ஈடுபட்டுள்ளது.
டிட்வா’ புயல் காரணமாக அண்டை நாடான இலங்கையில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இலங்கை அரசின் கோரிக்கைப்படி, இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல், அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
போர்க்கப்பலில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
















