ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சொத்துவரி குறைப்பு பற்றிப் பேசாததை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மேயர் நாகரத்தினம் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், சொத்துவரி குறைப்பு பற்றிப் பேசாததை கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
















