டெரக்கோட்டா விளக்குகளின் வருகையால் அகல் விளக்குகள் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 4-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகல்விளக்கு தயாரிப்புப் பணி நிறைவடைந்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆயிரம் அகல் விளக்குகள், நடப்பாண்டு 750 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை குறைந்துள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், டெரக்கோட்டா விளக்குகளின் வருகையால் அகல் விளக்குகள் விற்பனை மந்த நிலையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
















