திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி சத்துணவு ஊழியரை சாதிய ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு திருமலைக்கவுண்டன் அரசுப் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாளை, சிலர் சாதி பெயரை கூறி அவமானப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிகள் பழனிசாமி, சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
















