திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் மர தேருக்கு கலசங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதன் 7ஆம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
இந்நிலையில் வரும் 30ம் தேதி ஏழாம் நாள் திருவிழா நடைபெற உள்ளதால் மர தேரில் பொருத்தப்படும் கலசத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் எழுந்தருளும் பல்வேறு தேர்களுக்கு கலசங்கள் பொருத்தப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.
















