திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியான நபர்களுக்குப் பிரதமர் மோடியின் பயனுள்ள திட்டம் சென்றடைய விடுவதில்லை என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனைதொடர்ந்து பேட்டியளித்த பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்கு ஸ்டாலின் அரசியல் ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
















