நாகை நம்பியார் நகரில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.
















