மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரங்கம்பாடியில தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
மீட்பு பணிக்காக ரப்பர் படகு, மரம் அறுக்கும் இயந்திரம், அரிவாள், பாறை, மண்வெட்டி உள்ளிட்ட 60 வகையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரும் சீர்காழிக்கு விரைந்துள்ளனர்.
















