பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் 50 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.
இதனால் அப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே, ராமேஸ்வரத்திற்கு நேற்று முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் ரயில் இன்ஜினை மட்டும் முதலில் இயக்கிச் சோதனை நடத்திய ரயில்வே துறை அதிகாரிகள், பின்னர், பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கிச் சோதனை மேற்கொண்டனர்.
















