ராமநாதபுரம் அருகே 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமாகின.
இதனால் பல லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த உப்பள உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் இதே நிலை நீடிப்பதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் திமுக அரசு உப்பளங்களை கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டியதோடு வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.
















