நாகையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நாகூர் வள்ளியம்மா நகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
50 குடும்பங்கள் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இது போன்ற பாதிப்புக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டும் மக்கள், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















