கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் 6ம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தீபத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆறாம் நாள் உற்சவத்தை ஒட்டித் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் தாயாருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க யானை வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட சுவாமிகளை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர். அப்போது 63 நாயன்மார்களை சுமந்தபடி சென்று பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
















